Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கார் விபத்தில் இந்தியாவின் பளுதுாக்கும் வீரா்கள் பரிதாப மரணம்!

In இந்தியா
Published: 09:05 GMT, Jan 7, 2018 |
0 Comments
1075
This post was written by : Kemasiya
hgvjhgvh

டெல்லியில் இடம்பெற்ற கார்விபத்தில் மூன்று பளுதூக்கும் வீரர்கள் உட்பட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், இரண்டு உலகசம்பியன் வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 4மணியளவில் டெல்லி ஹரியானா பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது

இந்த விபத்திற்கு டெல்லியில் நிலவிவரும் பனிமூட்டம் ஒரு காரணம் என தெரிவிக்கப்படுவதோடு, காரில் பயணித்த வீரர்கள் மதுபோதையில் காணப்பட்டனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த கார் வேகமாக சென்றுகொண்டிருந்த வேளை மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதாகவும், இதில் சம்பவ இடத்தில் உயிரிழந்த மூவர் ஹரீஸ், தின்கு, சுராஜ் ஆகிய மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஒருவர் யார் எனத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஆண்டில் மொஸ்கோவில் இடம்பெற்ற கார் பந்தயப் போட்டியில் வெற்றி பெற்ற இரண்டு உலக சம்பியன் வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை  டெல்லி பொலிஸார் மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)