Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எயிட்ஸ் நோயாளர்களுக்கு திருமணம்! – ஆரம்பமாகின்றது புரட்சித் திட்டம்

In
Published: 09:12 GMT, Jan 7, 2018 |
0 Comments
1168
This post was written by : Puvanes

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் எச்.ஐ.வி தொற்றுதலுக்கு உள்ளானவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியில் அரசுசாரா அமைப்பான ஜி.எஸ்.என்.பி நிறுவனம் மூலமாக ஏற்பாடுசெய்யப்பட்ட குறித்த நிகழ்வில் ஏராளமான எயிட்ஸ் நோயாளிகள் கலந்துகொண்டுள்ளனர்.

சமூகத்தில் ஒதுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துவந்த பலர் இதில் கலந்துகொண்டு தமக்கான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளனர். அத்துடன் நிகழ்வின் போது மேடைக்கு வந்தவர்கள் தமது எதிர்காலம் மற்றும் வருமானம் தொடர்பிலான தகவல்களை தெரிவித்துள்ளனர்.

குறித்த நிகழ்வில் போது ஜி.எஸ்.என்.பி நிறுவனத்தின் இயக்குனர் பட்டேல் கருத்து வழங்கு தெரிவிக்கையில் “இந்தத் திட்டத்தின் மூலம் எயிட்ஸ் நோயாளர்களுக்கு மீள்வாழ்வு அளிக்க முயற்சி செய்துவருகின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உலகஅளவில் இந்தியாவானது எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் 2007 தொடக்கம் 2015ஆம் ஆண்டுவரையிலான காலப்பகுதிக்குள் எச்.ஐ.வி நோய்த்தாக்கம் 0.34 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும், குறித்த நோய்த் தாக்கத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் 67000 ஆக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg