Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரலாற்று சிறப்பு மிக்க தினத்தில் இலங்கை வரும் இங்கிலாந்து இளவரசர்!

In இலங்கை
Published: 10:04 GMT, Jan 7, 2018 |
0 Comments
1047
icon_com
This post was written by : Anojkiyan
ed

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின விழாவில், இங்கிலாந்து இளவரசர் எட்வர்ட் விஷேட விருந்தினராக கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தோடு அவரை கௌரவிக்கும் முகமாக சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி, காலி முகத்திடலில் முக்கிய இராணுவ அணிவகுப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்ட அழைப்பை, பக்கிங்ஹாம் அரண்மனை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எலிசபெத் மகாராணி மற்றும் பிலிப் இளவரசர் ஆகியோரின் கனிஷ்ட புதல்வர் இளவரசர் எட்வர்ட் சுதந்திர தின நிகழ்விற்கு வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஐம்பதாவது சுதந்திர தின விழாவில், பிரித்தானிய மகாராணியின் மூத்த புதல்வர் இளவரசர் சார்ள்ஸ் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)