Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொள்வனவிற்கு வசதியாக நெற் களஞ்சியங்களைத் திறப்பதற்கு ஏற்பாடு!

In இலங்கை
Updated: 09:15 GMT, Jan 7, 2018 | Published: 09:15 GMT, Jan 7, 2018 |
0 Comments
1118
This post was written by : Ravivarman

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முறையாக அறுவடைக் காலத்திலேயே நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு வசதியாக மாவட்டத்திலுள்ள நெற் களஞ்சியங்களைத் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை விவசாயிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாகும் என மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக உன்னிச்சைக்குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவக் குழுத் தலைவர் கே. யோகவேள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையில்,

‘இதுவரை காலமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல்லை விளைச்சல் காலத்திலேயே விற்பதற்கு சீரான ஏற்பாடுகள் செய்த தரப்பட்டிருக்கவில்லை. இப்பகுதியில் விளைவிக்கப்பட்ட பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடை நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாடனர்.

அதனால், உத்தரவாதமற்ற விலையில் தனியார் வியாபாரிகளுக்கே நெல்லை விற்க வேண்டியிருந்தது.
இதுவரை காலமும் அம்பாறை மற்றும் பொலன்நறுவை மாவட்டங்களின் நெல் அறுவடைக் காலத்தை மையமாக வைத்துத்தான் நெல் சந்தைப்படுத்தும் சபை பெப்ரவரி மாதக் கடைசியில் மட்டக்களப்பிலுள்ள நெற் களஞ்சியங்களை இயக்க ஆரம்பித்திருந்தது.

ஆரம்ப காலம் தொட்டே இந்த நிலைமை இருந்து வந்ததால் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் தமது விளைச்சல் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் கடன் பளுவால் விரக்தியடைந்திருந்தார்கள்.

வாழைச்சேனை மற்றும் வவுணதீவுப் பிரதேசத்தில் தலா 1500 மெற்றிக் தொன் நெல்லைக் களஞ்சியப்படுத்தக் கூடியதாக களஞ்சியசாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க அதிபர் உத்தரவாதமளித்துள்ளார். இது மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்’ என கே. யோகவேள் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg