Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரின் மேன்முறையீடு மீண்டும் நிராகரிப்பு

In
Updated: 09:20 GMT, Jan 7, 2018 | Published: 09:20 GMT, Jan 7, 2018 |
0 Comments
1076
This post was written by : Suganthini

ரஷ்யாவில் எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி செய்த மேன்முறையீட்டை, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று (சனிக்கிழமை) நிராகரித்துள்ளது.

ரஷ்யாவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை, எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி தாக்கல் செய்தபோது, அதனைத் தேர்தல்கள் ஆணையகம் நிராகரித்தது.

தேர்தல்கள் ஆணையகத்தின் இந்தத் தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது தடவையாக எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி மேன்முறையீடு செய்தபோதும், அந்த மேன்முறையீட்டை நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி மீதான ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழந்துள்ளதாக, ரஷ்யாவின் மத்திய தேர்தல்கள் ஆணையகம் கூறியிருந்தது.

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், அந்நாட்டில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டது. மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள புட்டினுக்கு பாரிய சவாலாக 41 வயதான நவால்னி காணப்படுகின்றார்.

இதேவேளை, இம்மாதம் 28ஆம் திகதி ஆர்ப்பாட்டத்துக்கு நவால்னி அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg