Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அட்வென்சர் படத்தில் நடிக்கிறார் மாதவன்

In சினிமா
Updated: 10:03 GMT, Jan 7, 2018 | Published: 10:03 GMT, Jan 7, 2018 |
0 Comments
1067
This post was written by : Arul Jesu

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கின்றவர் மாதவன். இவர் அடுத்து
அட்வென்சர் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.

மஞ்சப்பை மற்றும் நயன்தாராவின் ‘டோரா’ படங்களை தன் பேனர் மூலம் இயக்கியவர் சற்குணம். தனது அடுத்த படத்தில் மாதவனை வைத்து இயக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

மிக பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தை ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘றெக்க’ படங்களை தயாரித்த காமன்மேன் கணேஷ் தயாரிக்க இருக்கிறார்.

இது தொடர்பாக இயக்குநர் கூறுகையில்:
‘இந்த படம் காடுகளில் நடக்கும் கதையை மையப்படுத்தியது, தாய்லாந்து, மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் ஹாரி பாட்டர் அன்ட் டெத்லி ஹாலோஸ் பார்ட் 2 மற்றும் ட்ராகுலா அன்டோல்டு படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் சண்டைக்கலைஞர் க்ரே பரிட்ஜ் பணியாற்றுகிறார்.

இது ‘வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் இயக்குநர் ரதிந்திரன் தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடந்து வருகிறது.
ஆக்ஷன் அட்வென்சர் படமாக உருவாகும் இந்த படத்தை குழந்தைகளுக்கான படமாகவும் உருவாக்குகிறோம். இது ஒரு குடும்பத்தோடு பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாகும். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது’ என்றார்.

இறுதிச்சுற்று படத்திற்குப் பிறகு மாதவன் நடிக்கின்ற படங்களுக்கு எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg