Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மூன்று மாத காலங்களுக்கு நாடளாவிய ரீதியில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை!

In இலங்கை
Updated: 10:45 GMT, Jan 7, 2018 | Published: 10:44 GMT, Jan 7, 2018 |
0 Comments
1144
This post was written by : Anojkiyan

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்களை முன்னிட்டு எதிர்வரும் மூன்று மாத காலங்களுக்கு நாடளாவிய ரீதியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும்படி பொலிஸ்மா அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“நாடளாவிய ரீதியாக சட்டவிரோத ஆயுதங்களை தேடுவதற்கும் விசேட பொலிஸ்துறை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர வீதித் தடைகளை ஏற்படுத்தி சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பொலிஸ்மா அதிபர், சகல பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்

இந்த காலப்பகுதியினுள் குற்றவாளிகளை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்தும் பொலிஸ் அதிகாரிகளுக்கு, பொலிஸ்துறை நலன்புரி நிதியில் இருந்து விசேட கொடுப்பனவுகள் வழங்கப்படும்
இதேவேளை, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் அச்சுறுத்தல் ஆகிய தேர்தல் சட்டங்களை மீறிய 54 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 8 வேட்பாளர்களும் உள்ளடங்குகின்றனர்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg