Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விசுவாசம் படத்தில் நானா? : இசையமைப்பாளர் ஷாம்

In சினிமா
Published: 10:35 GMT, Jan 7, 2018 |
0 Comments
1065
icon_com
This post was written by : Arul Jesu
dc-Cover-nenfnugtbdf2cj2n14ee7ts6h6-20170813230033.Medi

‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவாவின் இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்கிறார் அஜித்.

சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு முதலில் இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  சில சிக்கல்களால் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகினார்.

யார் இசையமைப்பாளர் என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் தற்போது, ‘விக்ரம் வேதா’ படம் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் ஷாமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.

இதனால், ரசிகர்கள் பலர் அவருக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து இசையமைப்பாளர் ஷாம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தொடர்ந்து வரும் வாழ்த்துக்களால் திகைத்து போயிருக்கிறேன். என்னிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் நான் ‘விசுவாசம்’ படத்தில் இருக்கிறேனா என்பது எனக்கே தெரியாது. இன்னும் உறுதியாகவில்லை. நான் பெரிய தல ரசிகன். கண்டிப்பாக எதிர்காலத்தில் அவருடைய படத்துக்கு இசையமைப்பேன், ஆக்ரோஷமான பின்னணி இசை தருவேன். காத்திருங்கள், ஒரு சிறப்பான செய்தி வரவிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)