Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுவர் பூங்கா வளாகத்தில் பொலித்தீன் கழிவுகள்!

In இலங்கை
Updated: 11:02 GMT, Jan 7, 2018 | Published: 11:02 GMT, Jan 7, 2018 |
0 Comments
1209
This post was written by : Ravivarman

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில்  அமைந்துள்ள சிறுவர் பூங்கா வளாகத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகள் தேங்கிக் காணப்படுவதுடன், நுளம்புகள் பரவும் விதத்திலும் சூழல் காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் வளாகத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வைத்தியசாலை மேம்பாட்டு பேரவையினால் சிறுவர்களுக்கான விளையாட்டு முற்றம் ஒன்று அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக கைவிடப்பட்ட விளையாட்டு முற்றம் 2010ஆம் ஆண்டு மீளப்புனரமைக்கப்பட்டு வருகின்றது. இந்த விளையாட்டு முற்றத்தில் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவரும் ஏராளமான சிறுவர்களும், விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் சிறுவர்களும் தமது பொழுதுகளை கழிக்கின்றனர்.

இந்நிலையில் இவ்விளையாட்டு முற்றத்தில் மிக நீண்ட நாட்களாக துப்பரவு செய்யப்படாமல் பொலித்தீன் பைகள் அதிகளவில் காணப்படுவதுடன், மழை நீர்த்தேங்கிக் கூடிய வகையில் பிளாஸ்டிக் மற்றும் கழிவுப்பொருட்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

இதேவேளை விளையாட்டு முற்றம் அமைந்துள்ள பகுதிக்குள் கழிவுகளை போடக்கூடிய கழிவுத்தொட்டிகள் எவையும் வைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன.

இவ்வாறு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் ஒரு வைத்தியசாலை வளாகத்தில் இவ்வாறு சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாது கழிவுப்பொருட்கள் காணப்படுவது தொடர்பில் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

IMG20180103145154

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg