Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தி.மு.க.வின் செயற்பாடு மனவருத்தம் அளிக்கிறது: முதல்வர்!

In இந்தியா
Updated: 12:28 GMT, Jan 7, 2018 | Published: 11:13 GMT, Jan 7, 2018 |
0 Comments
1103
icon_com
This post was written by : Kemasiya
cncvgb

தன்னுடைய கருத்துக்களுக்கு எதிரான கருத்துகளையே தி.மு.க.வினர் வெளியிட்டு வருகிறனர் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலமே மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினைக்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை நேற்றைய தினம் ஸ்டாலினுடன் தொலைபேசியில் உரையாடும் போது தெரிவித்திருந்தேன்.

ஆனால் அவற்றை மறைத்து, ஊழியர்களின் பிரச்சினைக்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று முதல்வர் தெரிவிக்கவில்லை என, தி.மு.க. வெளியிட்டுள்ள தகவல்களை பார்க்கும் போது மனவருத்தமாகவுள்ளது” எனக் குறித்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தி.மு.க.வெளியிட்டிருந்த அறிக்கையில், “மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனடி பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வந்து,  தமிழக மக்களின் போக்குவரத்துப் பிரச்சினையைப் போக்குமாறு வலியுறுத்தினார்.

அத்துடன் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்காமல் உள்ள நிலுவைத்தொகை உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றித் தருமாறும் கோரியிருந்தார்.

ஆனால் ஸ்டாலின் கூறியதை கேட்டுக்கொண்ட முதல்வர், குறித்த பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தொடர்பான விபரம் எதையும் வெளியிடவில்லை.”என்று தி.மு.க வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)