Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

168 பயணிகளுடன் தீப்பற்றிய விமானம்! – காணொளி வெளியானது

In கனடா
Published: 11:10 GMT, Jan 7, 2018 |
0 Comments
1567
icon_com
This post was written by : Puvanes

கனடாவில் பயணிகள் விமானங்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை கனடா டோரண்டோ பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு மெக்சிகோவில் இருந்து வருகைத்தந்த விமானம் ஒன்று குறித்த விமானநிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானம் ஒன்றுடன் மோதியுள்ளது.

சம்பவம் காரணமாக தரையிறங்கிய விமானத்தின் இறக்கை பகுதி தீப்பற்றியுள்ளது, இதன்போது விமானத்திற்குள் 168 பயணிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை பாதுகாப்பாக மீட்டுள்ளதோடு தீயையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த மோதல் தொடர்பான காரணங்கள் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான முறையான விசாரணைகள் நடத்தப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த மோதல் சம்பவத்தை விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் காணொளியாக பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

canada001
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)