Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்த கோரிக்கை!

In இலங்கை
Updated: 11:55 GMT, Jan 7, 2018 | Published: 11:55 GMT, Jan 7, 2018 |
0 Comments
1162
This post was written by : Ravivarman

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள சோரன்பற்று கிராமத்தில் தொடர்ந்தும் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள சோரன்பற்று கிராமத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இப்பகுதியில் தினமும் இரவு வேளைகளிலும் பகல் வேளைகளிலும் சட்டவிரோதமாக மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு டிப்பர் வாகனங்களில் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சோரன்பற்று கிராமத்தை அண்டிய ஆற்றுப் படுக்கைகள் மற்றும் இப்பகுதியில் உள்ள குளங்கள் என்பவற்றில் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதாவது சோரன்பற்றுக்கிராமத்தில் காணப்படுகின்ற யாவில்குளம், வட்டக்குளம் பொதுமயானம் ஆகிய பகுதிகளில் அதிகளவான மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் விவசாய செய்கைகள் மற்றும் விவசாய நிலங்கள் அழிவடையும் அபாய நிலை காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் இப்பகுதி கிராம அலுவலர் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இவ்வாறு மணல் அகழ்வுகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், எனது களவிஜயத்தின் போதும் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக்கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இதனைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg