Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூர்யா ரசிகர்கள் உச்ச கொண்டாட்டம்!!

In சினிமா
Updated: 11:40 GMT, Jan 7, 2018 | Published: 11:40 GMT, Jan 7, 2018 |
0 Comments
1065
This post was written by : Arul Jesu

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம்.

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
இந்த கொண்டாட்டத்தில் திளைத்திருக்கும் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகியிருக்கிறது.

சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் இடம்பெற்றது.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், சூர்யாவின் 37,38,39ஆவது படங்கள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

37ஆவது படத்தை அயன் மற்றும் மாற்றான் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்குகிறார்.
38ஆவது படத்தை ’24’ படத்தை இயக்கிய விக்ரம் குமாரும், 39ஆவது படத்தை ‘சிங்கம்’ படத்தை இயக்கிய ஹரியும் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg