Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கணவனின் மரண அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு

In கனடா
Updated: 11:44 GMT, Jan 7, 2018 | Published: 11:44 GMT, Jan 7, 2018 |
0 Comments
1157
This post was written by : Puvanes

கனடாவில் வயதான கணவனின் இறப்பை கண்ட மனைவியும் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது.

கனடா – ஹோரொன் பகுதியில் வசித்துவரும் 90 வயதான கிரான்ட் ட்ரீப்னர் எனப்படும் முதியவர் அண்மையில் தன் வீட்டைவிட்டு வெளியே சென்றபோது கடும் குளிரினால் ஏற்பட்ட மாரடைப்பில் உயிரிழந்துள்ளார்.

எனினும் இதனை அறியாத அவருடைய மனைவி அடா ட்ரீப்னர் (வயது 83) கணவரைத்தேடி வெளியே சென்றபோது கணவனின் உயிரற்ற உடலைக்கண்டு அதிர்ச்சியில் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த தம்பதியினர் ஒருவர்மீது ஒருவர் அளவுகடந்த அன்புடன் வாழ்ந்து வந்ததாகவும், குளிரின் காரணமாகவே கிரான்ட் ட்ரீப்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தசம்பவமானது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg