Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோடிகளில் நிதியுதவி வழங்கிய சரவணா ஸ்ரோர்ஸ்

In சினிமா
Published: 12:28 GMT, Jan 7, 2018 |
0 Comments
1119
This post was written by : Arul Jesu
Saravana-Stores-Owner-donates-a-Huge-Amount-for-Nadigar-Sangam-building (1)

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர், அபிபுல்லா சாலையில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே.

இக்கட்டடத்தில் கலையரங்கம், சிறிய திரையரங்கு, உடற்பயிற்சி கூடம், நடனம் மற்றும் நடிப்பு பயிற்சி கூடங்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான அறைகள் போன்றவை அமைய உள்ளன.

இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர்.

கட்டட நிதி திரட்டுவதற்காக ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மேலும் நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி நிதி திரட்டப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.

அந்தவகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நேற்று (சனிக்கிழமை) பிரமாண்டமாக நடைபெற்றது.

இதன்போது இந்திய மதிப்பில் ரூ2.5 கோடி ரூபா நிதியுதவியை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் வழங்கி உள்ளது.

இதனை நட்சத்திர கலைவிழாவின்போது ரஜினி மற்றும் கமல் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)