Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டின் அடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க: நஸீர் அஹமட்

In இலங்கை
Updated: 16:00 GMT, Jan 7, 2018 | Published: 16:35 GMT, Jan 7, 2018 |
0 Comments
1141
This post was written by : Ravivarman

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே கோலோச்சப் போகின்றார் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஏறாவூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வட்டார தேர்தல் காரியாலயத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

‘வரிச்சுமையை மக்கள் மீது ஏற்படுத்தி உள்ளூராட்சி மன்றங்கள் என்றாலே மக்களிடம் வெறுப்பேறுமளவுக்கு இன்று நிலைமை காணப்படுகின்றது. இந்த நிலைமையை மாற்றி முழுவதுமாக மக்களுக்குச் சேவை செய்வதை நடைமுறையில் காட்டவே நாங்கள் உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றப் போகின்றோம்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த எதிர்க்கட்சி, ஆளும் கட்சி எல்லோரது காலத்திலும் நாம் சரியான வியூகங்களை வகுத்து அரசியல் ஆட்சியதிகாரத்தில் பங்கெடுத்திருக்கின்றோம். இதற்கு சிறந்த அரசியல் சாணக்கியம் வேண்டும். மக்களின் மன நிலையையும் கள நிலைவரங்களையும் நாடி பிடித்து அறிய வேண்டும்.

ஏறாவூர் நகரசபையையும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து நாம் முழுமையாகக் கைப்பற்றுவோம்’ என நஸீர் அஹமட் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg