Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூர் பள்ளிவாசலில் திருட்டு!

In இலங்கை
Published: 16:25 GMT, Jan 7, 2018 |
0 Comments
1051
This post was written by : Ravivarman
DSC01852

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் ஏறாவூர் காட்டுப்பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த 3 சி.சி.ரி.வி. கமராக்கள் உட்பட ஒருதொகைப் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக மேற்படி பள்ளிவாசல் நிருவாகம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.

இச்சம்பவம் நேற்று இரவு (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சமூக சேவையாளரும் ஏறாவூர் காட்டுப்பள்ளிவாசல் தலைவருமான எம்.எல். அப்துல் லத்தீப் மேலும் தெரிவிக்கையில், கடந்த காட்டுப்பள்ளிவாசலில் முன்னும் பின்னுமாக 3 பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த காணொளிக் கமெராக்கள் விஷமிகளால் திருடப்பட்டுள்ளன.

ஊர் மத்தியில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடமென்பதால் இங்கு காணொளிக் கமெராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

ஆனால் இவ்வாறு காணொளிக் கமெரா பொருத்தப்பட்டிருந்தது சமூக விரோத விஷம சக்திகளுக்கு இடைஞ்சலாக அமைந்திருக்கிறது’ எனத் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)