Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிணைமுறி மோசடி தொடர்பில் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமர் கோரிக்கை!

In இலங்கை
Updated: 16:50 GMT, Jan 7, 2018 | Published: 16:49 GMT, Jan 7, 2018 |
0 Comments
1110
This post was written by : Ravivarman
_MG_0358

பிணைமுறி மோசடி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பான விவாதத்திற்காக விரைவாக, நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகரிடம் கோரியுள்ளார்.

கொழும்பு கெம்பல் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விஷேட மாநாட்டில் உரையாற்றிய போதே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இந்த அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு சட்டமா அதிபருக்கும் சந்தர்ப்பம் வழங்கவேண்டும். அதேபோல் நாடாளுமன்றத்திலும் அந்த அறிக்கை குறித்து விவாதிக்கப்படவேண்டும்.

தினேஸ் குணவர்தன போன்றோர் இந்த விடயம் தொடர்பில் விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரிவருகின்றனர். எனவே விரைவில் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நான் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புடனும் செயற்படவேண்டும். 10 பில்லியன் பணத்தைக் களவாடியதாகத் தெரிவிக்கின்றனர். அப்படியானால் அவ்வாறு பலமடங்கு பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் எங்கே? எனவே தன்னைத்தானே சுய விமர்சனம் செய்துக்கொள்ளவேண்டியது கட்டாயம்’ என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

_MG_0260 _MG_0153

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)