முறி மோசடியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்கத்திலேயே உள்ளனர்: மஹிந்த

மத்திய வங்கியின் பிணை முறி விநியோகத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தற்போதைய அரசாங்கத்திலேயே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“தற்போதைய அரசாங்கம் பதவிக்குவந்த காலம் முதல் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையேயே பிரச்சினைகள் ஏற்படுகின்றன. விவசாயிகளுக்கு தேவையான உரம் தகுந்த நேரத்தில் கிடைப்பதில்லை.
இவ்வாறானதொரு போக்கிலேயே அரசாங்கம் பயணிக்கின்றது. மத்திய வங்கியின் முறி விநியோகத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் அரசாங்கத்திலேயே அங்கம் வகிக்கின்றனர். இதனை ஜனாதிபதி தெளிவாக எடுத்துரைத்துள்ளார்” என கூறினார்.