Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடந்த ஆட்சியில் அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பணமே சுரண்டப்பட்டது: சந்திரிகா

In இலங்கை
Updated: 02:28 GMT, Jan 8, 2018 | Published: 02:28 GMT, Jan 8, 2018 |
0 Comments
1162
This post was written by : Anojkiyan

கடந்த ஆட்சியில் அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பணமே சுரண்டப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்தனகல்ல பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த அரசாங்கத்தின் போது அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சிலர் குறிப்பிட்டாலும், அதன் ஊடாக மக்கள் பணமே சுரண்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து தற்போதைய நல்லாட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தனர். ஆனால் மஹிந்த அவரது ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாரா?

பிணை முறி மோசடி விவாகரத்தில் பிரதமர் பதவியை வழங்கியதற்காக பொறுப்பு கூற வேண்டும் என்ற போதிலும். அவர் ஊழலில் ஈடுபடவில்லை. ஆகையால் அவர் ஏன் பதவி விலக வேண்டும்” என கேள்வி எழுப்பினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg