Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடந்த ஆட்சியிலும் முறி மோசடி? மனம் திறந்தார் மஹிந்த

In இலங்கை
Updated: 04:25 GMT, Jan 8, 2018 | Published: 02:50 GMT, Jan 8, 2018 |
0 Comments
1196
This post was written by : Anojkiyan

மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய முறி மோசடி கடந்த ஆட்சியிலும் இடம்பெற்றிருக்கலாம் என ஐக்கிய மக்கள் சுத்திர கூட்டமைப்பின் பொது செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சூரியவெ வ பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய முறி மோசடியை நானே முதலில் வெளிகொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். அதனை நான் மேற்கொள்ளாதிருந்தால் இவ்வாறான ஒரு பிரச்சினை நாட்டிற்கு தெரியவந்திருக்காது. இவ்வாறான தொரு பிரச்சினை தற்போதைய ஆட்சியில் மாத்திர மல்ல, கடந்த ஆட்சியிலும் இடம்பெற்றிருக்கலாம்.

ஆனால் அப்போதைய சூழ்நிலையில் அதனை வெளிகொண்டு வருவதற்கோ, அதனை எதிர்ப்பதற்கோ எவரும் முன்னிற்கவில்லை. காரணம் அவர்களுக்கு நிலை, கேள்விக்குறியானது. இவ்வாறு இருக்கையில் தற்போது ஜனாதிபதி ஆணைக்குழு என்ற ஒன்று அமைக்கப்பட்டு குற்றங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஆணைக்குழுவினை அமைக்கும் போது பலர் அதனை வேண்டாம் என்றே கூறிவந்தனர். ஆனால் இன்று குற்றங்கள் வெளிவர தொடங்கியுள்ளன. இதற்காக ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சி மற்றும் தற்போது அவரின் செயற்பாடுகள் தொடர்பில் அவருக்கு பாரிய சவால்கள் ஏற்பட்டுள்ளன” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg