Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முறி மோசடி தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும்: பிரதமர் கோரிக்கை

In இலங்கை
Updated: 03:33 GMT, Jan 8, 2018 | Published: 03:30 GMT, Jan 8, 2018 |
0 Comments
1198
This post was written by : Anojkiyan

மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொரளை – கெம்பல் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மாநாடில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இந்தக் போரிக்கையை முன்வைத்தார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

“2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியினுள் நிதி சபையின் அனுமதியின்றி 4 ஆயிரம் பில்லியின் ரூபாய் நிதி, பிணை முறி ஊடாக ஏலம் விடப்பட்டதால் அரசாங்கத்திற்கு 10 ஆயிரம் பில்லியன் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.

மஹிந்த 10000 பில்லியன் கடன் வைத்து விட்டுச்சென்றுள்ளார். குற்றவாளிகளை கண்டுபிடிக்க தான் நாம் உள்ளோம். இதற்கு நாங்கள் அஞ்சவில்லை” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg