Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லாட்சியில் மரத்தில் தேங்காயும் காய்ப்பது இல்லை: மஹிந்த கேலி

In இலங்கை
Updated: 04:55 GMT, Jan 8, 2018 | Published: 03:59 GMT, Jan 8, 2018 |
0 Comments
1228
This post was written by : Anojkiyan

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மரத்தில் தேங்காய்கூட காய்ப்பது இல்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன முன்னணி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புத்தளம் மாவட்டத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஏன் ஆட்சி நடத்துகின்றன. இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி முறைகளை சாடுகின்றன.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி காணரமாகவே மக்கள் மீது அதிக வரிச்சுமை அதிகரித்துள்ளது. அதனாலேயே பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும்.
இனியாவது, வாக்குகளை சரியாக வாக்களியுங்கள். ஆட்சியை கவிழ்ப்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg