தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி பரிசுத்த பாப்பரசர் எடுத்துரைப்பு
தங்களது குழந்தைகளுக்கு தாய்மார்கள் முடிந்தவரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்க வேண்டுமென, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
வத்திக்கானிலுள்ள சிஸ்டின் தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற திருமுழுக்கு ஆராதனையின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
18 பெண் குழந்தைகளுக்கும், 16 ஆண் குழந்தைகளுக்கும் பாப்பரசர் ஞானஸ்ஞானம் வழங்கியுள்ளார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்க தாய்மார்கள் அச்சமடைய வேண்டியதில்லை. தாய்ப்பாலுடன் தாயின் அன்பும், பரிவும் குழந்தைகளுக்கு ஊட்டப்பட வேண்டும்’ என்றார்.
தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவத்தை பாப்பரசர் எடுத்துரைத்துக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த தாயொருவர் தனது குழந்தைக்கு புட்டிப்பால் வழங்கியமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சிஸ்டின் தேவாலயத்தில் கடமையாற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு வருடந்தோரும் பாப்பரசர் ஞானஸ்ஞானம் வழங்கி வருகின்றார்.