Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரூ.300 கோடி செலவில் விக்ரமின் பிரமாண்ட படம்!!

In சினிமா
Updated: 09:19 GMT, Jan 8, 2018 | Published: 04:51 GMT, Jan 8, 2018 |
0 Comments
1095
This post was written by : Arul Jesu

விக்ரம் நடிப்பில் ‘ஸ்கெட்ச்’  திரைப்படம்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி வெளிவரவிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ போன்ற படங்களில் நடித்துவருகிறார்.

இந்த படங்களின் பின்னர் இந்திய மதிப்பில் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் நடிக்க இருக்கும் இந்த படத்திற்கு ‘மஹாவீர் கர்ணா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகும் இந்த படத்தை நியூயோர்க்கை சேர்ந்த யுனிடெட் பிலிம் கிங்டொம் என்ற  நிறுவனம் தயாரிக்கிறது.

வரும் ஒக்டோபரில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது. உலகின் பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் பணிபுரிய இருக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg