Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைதானத்தை வியப்பில் ஆழ்த்திய கடைசி நிமிட கோல்!

In உதைப்பந்தாட்டம்
Published: 04:47 GMT, Jan 8, 2018 |
0 Comments
1084
icon_com
This post was written by : Puvanes
chennai001

4ஆவது இந்தியன் சுப்பர் லீக் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் டெல்லி எதிர் சென்னை அணிகள் மோதிக்கொண்ட போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த குறித்த தொடரின் 41ஆவது லீக் போட்டியில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டன.

ஆரம்பம் முதலாகவே இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் போட்டி விறுவிறுப்பாக நகர்ந்தது. எனினும் போட்டியின் 24ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் நிகாய்த் முதல் கோலினை பதிவு செய்தார்.

தொடர்ந்த 42 ஆவது நிமிடத்தில் லால்பெகுலா சென்னை அணிக்கு கோல் ஒன்றினை அடித்தார். இதனால் போட்டியின் முதல் பாதி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையடைந்தது.

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கும் முனைப்புடன் வேகமாக விளையாடத் தொடங்கினர். ஆட்டத்தின் 51ஆவது நிமிடத்தில் லால்பெகுலா இன்னுமொரு கோலினை பதிவு செய்ய சென்னை அணி முன்னிலை வகித்தது.

தொடர்ந்து விறுவிறுப்பாக நகர்ந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுவிடும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். எனினும் போட்டியின் கடைசி நிமிடத்தில் டெல்லியின் பெர்னாண்டஸ் கோல் ஒன்றினை அடித்து ஆச்சரியப்படுத்தினார்.

இதனால் வெற்றி உறுதி என எதிர்பார்த்திருந்த சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)