Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பப்புவா நியூகினியாவில் எரிமலை வெடிப்பு: 500 பேர் வெளியேற்றம்

In
Published: 05:12 GMT, Jan 8, 2018 |
0 Comments
1170
This post was written by : Suganthini

அவுஸ்ரேலியா, பப்புவா நியூகினியாவின் கடோவர் தீவிலுள்ள எரிமலையொன்று வெடித்துள்ளதைத் தொடர்ந்து, சாம்பலைக் கக்கத் தொடங்கியுள்ளதால், சுமார் 500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடோவர் தீவிலுள்ள 365 மீற்றர் உயரமான எரிமலை கடந்த வெள்ளிக்கிழமை வெடித்துள்ளதைத் தொடர்ந்து மிகத் தீவிரமாகச் சாம்பலைக் கக்கி வருகின்றது. இந்நிலையில், எரிமலைச் சாம்பல் காற்றுடன் பரவுவதால், அம்மலையை அண்டி வசிக்கும்  சுமார் 500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, மேற்கு –வடமேற்கு நோக்கிப் பயணிக்கும் விமானப் போக்குவரத்தில் தடையில்லை. ஆனாலும், நிலைமையைக் கவனத்திற்கொண்டு நியூகினியாவிலுள்ள வீவாக் (Wewak)  விமான நிலையச் செயற்பாடுகள் நடைபெறுமென, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg