Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களை வாழவைப்பதே எனது நோக்கம்: ரஜினிகாந்த் தெரிவிப்பு!

In இந்தியா
Published: 05:25 GMT, Jan 8, 2018 |
0 Comments
1541
This post was written by : Kemasiya
xcvbxcvx

நடிகனாக மக்களை மகிழ்வித்துவிட்டு செல்வதில் விருப்பமில்லை. தமிழக மக்களையும் வாழவைக்க வேண்டும் என்ற விருப்புடனேதான்  எனது அரசியல் பயணம் அமைகிறது என, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நட்சத்திரக்கலைவிழாவில் பங்கேற்ற பின்னர், ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்,

“தமிழக மக்களை நன்றாக வாழவைப்பதே எனது அதிகபட்ச ஆசை. ஒரு நடிகனாக அவர்களின் மனதில் இடம்பிடித்த நான் நடிகனாகவே இறந்துவிடக்கூடாது. எனவே மக்களை வாழவைப்பதற்கே எனது அரசியல் பயணம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ள நிலையில், தனிக்கட்சி ஆரம்பித்து ஆன்மீக அரசியல் நடத்தவுள்ளதாகவும் கூறியிருந்தார். இதற்கு பல வரவேற்புக்களும், எதிர்ப்புக்களும் அவரை நோக்கி சென்றவண்ணம் உள்ளன.

இந்நிலையில் தனது அரசியல் பயணம் மக்களுக்கு சேவை செய்யவே என்று நடிகர் ரஜினிகாந்த் மலேசியாவில் வைத்து கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)