Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிகாரப்பகிர்வு எப்போது முழுமை பெறும்? – சுமந்திரன் விளக்கம்

In இலங்கை
Updated: 09:02 GMT, Jan 8, 2018 | Published: 05:30 GMT, Jan 8, 2018 |
0 Comments
1208
This post was written by : Anojkiyan

சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில், தமது இறைமையை உபயோகித்து சட்டங்களை தாமே உருவாக்கி கொள்ளும் பட்சத்திலேயே அதிகாரப்பகிர்வு முழுமை பெறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து நாவாந்துறை ஒஸ்மானியாக் கல்லூரிக்கு அண்மையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் ஒரு மக்களாக ஒரே இடத்தில் ஒன்றாக வாழ்ந்தவர்கள். என்பதை காண்பிக்க வேண்டிய தருணம் இது. கிழக்கில் பல இடங்களிலும் சென்று பார்த்தபோது சந்தோஷபட்டேன். அங்கே தமிழ் முஸ்லீம் வேட்பாளர்கள் பலர் ஒன்றாக போட்டியிடுகின்றார்கள். வவுனியாவில் மூன்று சிங்கள வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்புதான் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் ஒரே அமைப்பு. தமிழ் மக்களுக்கு எப்படியான இருப்பு உரிமைகள் வேண்டும் என கோரி போராடுகின்றது கூட்டமைப்பு. அது இன்னமும் நிறைவேறவில்லை. அதற்காக நாம் பயணித்து கொண்டு இருக்கின்றோம்.

அதேவேளை மற்றைய மக்களின் உரித்துக்களையும் உரிமைகளையும் பற்றி பேசுகின்றது. எங்கள் மத்தியில் வாழும் சிறுபான்மையினருக்கு நாங்கள் மதிப்பு அளிக்காவிட்டால், இந்த நாட்டில் சிறுபான்மையினரான நாம் மதிப்பை எதிர்பார்க்க முடியாது. அதனாலேயே மற்றவர்களுக்கவும் போராடுகின்றோம். மற்றவரை அடக்கி எனக்கு மட்டும் உரித்தை கேட்டால் அதனை யாரும் ஏற்க மாட்டார்கள். உரிமை மறுக்க பட்டவருக்கு தான் மற்றவர்களின் உரிமையை மதிக்க தெரியும்.

எங்களுடைய இறைமைகளை நாங்களே உருவாக்க முடியும் அப்படி நடந்தாலே அதிகார பகிர்வு முழுமை பெறும். மாகாகண சபை முழுமையாக அதிகார பகிர்வு பெறவில்லை. 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்துவேன் என மஸிந்த ராஜபக்ச கையொப்பம் இட்டுள்ளார். அப்படி என்றால் அது முழுமையாக அமுல் படுத்தப்படவில்லை என்பதனை அவரே ஏற்றுக்கொண்டு உள்ளார்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg