Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெக்சிக்கோவில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 05:43 GMT, Jan 8, 2018 | Published: 05:43 GMT, Jan 8, 2018 |
0 Comments
1175
This post was written by : Suganthini

மெக்சிக்கோவின் புறநகர் பகுதியான அகாபுல்லோ (Acapulco) பகுதியில் இடம்பெற்ற இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் உள்ளூர் பொலிஸார் 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

அகாபுல்லோ பகுதியின் கடற்கரையோரத்திலுள்ள ஓய்வுவிடுதியொன்றிலேயே, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

மேற்படி ஓய்வுவிடுதியில் ஞாயிறு விடுமுறையையொட்டி பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞரொருவர் ஒழுங்கீனமாக நடந்துகொண்டமையை உள்ளூர் பொலிஸார் கண்டிக்க முற்பட்டபோது, பொலிஸாருக்கும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டது. இந்நிலையில், உள்ளூர் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, ராணுவத்தினரும் பொலிஸாரும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை சரணடையக் கோரியபோதும், சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து, ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 உள்ளூர் பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg