Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டமைப்பு வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்

In இலங்கை
Updated: 06:23 GMT, Jan 8, 2018 | Published: 06:23 GMT, Jan 8, 2018 |
0 Comments
1206
This post was written by : Risha

மட்டக்களப்பு மாநகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் 3ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் கந்தசாமி ரகுநாதனின் கொக்குவில் அலுவலகம் மீது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரவு 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவால் மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தாக்குதலை நடத்தியவர்கள் தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆதரவாளர்கள் என சந்தேகிப்பதாகவும் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

DSC08963 DSC08937

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg