Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனல் பறக்க போகும் நாடாளுமன்றம்: நாளை மறு தினம் சிறப்பு அமர்வு

In இலங்கை
Updated: 07:18 GMT, Jan 8, 2018 | Published: 06:42 GMT, Jan 8, 2018 |
0 Comments
1111
This post was written by : Anojkiyan
Parliament

அனல் பறக்கும் விவாதங்கள் எதிர்பார்க்கப்படுகின்ற நடாளுமன்ற அமர்வு நாளை மறுதினம் (புதன் கிழமை) இடம்பெறும் என்று பதில் நாடாளுமன்ற செயலர் அறிவித்துள்ளார்.

பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் அதுதொடர்பான விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்புக்களினாலும் வலியுறுத்தப்பட்ட நிலையிலேயே சபாநாயகர் கரு ஜெயசூரியாவின் உத்தரவிற்கு அமைய நாடாளுமன்ற பதில் செயலர் சிறப்பு அமர்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிணைமுறி தொடர்பான அறிக்கையில் பிரதமர் ரணில் உட்பட சில ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய ரணில், தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்க தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சபாநாயகரிடம் கோரியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)