Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாரியர்ஸ் அணியை பந்தாடியது ஹன்டர்ஸ் அணி!

In விளையாட்டு
Updated: 06:46 GMT, Jan 8, 2018 | Published: 06:46 GMT, Jan 8, 2018 |
0 Comments
1066
This post was written by : Puvanes

3ஆவது பிரிமியர் பட்மிண்டன் லீக் (பி.பி.எல்) போட்டித்தொடரின் நேற்றைய லீக் போட்டிகளில் அவாதே வாரியர்ஸ் அணியை, ஐதராபாத் ஹன்டர்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடந்த போட்டியில் அவாதே வாரியர்ஸ் அணியைச் சேர்ந்த கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹன்டர்ஸ் அணியைச் சேர்ந்த சாய் பிரனீத்துடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டார்.

ஆரம்பம் முதலாகவே ஸ்ரீகாந்தை திண்டாடவைத்த, பிரனீத் 15-10, 15-10 என்ற நேர் செட் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்றார்.

இதேவேளை, பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அவாதே வாரியர்ஸ் அணியைச் சேர்ந்த சாய்னா நேவால், ஹன்டர்ஸ் அணியை கரோலினா மரினை எதிர்கொண்டார்.

இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கரோலினா 14-5, 15-6, 15-11 என்ற நேர்செட்களில் வெற்றிபெற்றுள்ளார்.

அதேபோன்று, ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் அவாதே வாரியர்ஸை சேர்ந்த ஆர் சின் சங் – தங் சுன் மென் ஜோடி, ஹன்டர்ஸ் அணியின் மார்கிஸ் கிடோ – யோ இயான் சியாங் ஜோடியுடன் களம் கண்டது.

இந்தப் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய ஹன்டர்ஸ் அணி 14-15,15-6,15-11 என்ற செட் கணக்கில் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 23ஆம் திகதி ஆரம்பமான குறித்த தொடரில் சென்னை ஸ்மாஷர்ஸ், அஹமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ், லக்னோ அவாதே வாரியர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், டெல்லி டாஷர்ஸ், ஐதராபாத் ஹன்டர்ஸ், மும்பை ரொக்கெட்ஸ், நோர்த்ஈஸ்டர்ன் வோரியர்ஸ் ஆகிய 8 அணிகள் மோதுகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg