Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விசேட அம்சங்களுடன் சாம்சங் நோட்புக் 7 ஸ்பின் 2018 அறிமுகம்!

In அறிவியல்
Published: 07:12 GMT, Jan 8, 2018 |
0 Comments
1070
This post was written by : Ravivarman
201801061445478842_Samsung-Notebook-7-Spin-2018-with-rotating-touchscreen_SECVPF

சாம்சங் எலெக்ட்ரோனிக்ஸ் நிறுவனம் விசேட அம்சங்களுடன் நோட்புக் 7 ஸ்பின் (2018) சாதனத்தை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் எலெக்ட்ரோனிக்ஸ் நிறுவனம் சாம்சங் நோட்புக் 7 ஸ்பின் (2018) சாதனத்தை அறிமுகம் செய்திருக்கிறது. 360 கோணத்தில் வளைக்கக்கூடிய தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, 8-ம் தலைமுறை இன்டெல் கோர் i5 பிராசஸர், 8 ஜிபி மெமரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

18.5 எம்.எம். தடிமனாக இருக்கும் நோட்புக் 7 ஸ்பின் (2018) 1.53 கிலோ எடை கொண்டிருக்கிறது. 13.3 இன்ச் ஃபுல் எச்டி PLS தொடுதிரை கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் சாதனத்தை வழக்கமான கணினி அல்லது ரப்லட் போன்றும் பயன்படுத்த முடியும்.

256 ஜிபி எஸ்.எஸ்.டி. டிரைவ், விண்டோஸ் 10 இயங்குதளம் வழங்கப்பட்டிருப்பதோடு லொக்இன் செய்ய விண்டோஸ் ஹெல்லோ மூலம் கைரேகை ஸ்கானர் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

இத்துடன் ஆக்டிவ் பென் சப்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் வாடிக்கையாளர்கள் இதற்கு தனியே பணம் செலுத்த வேண்டும்.
ஆக்டிவ் பென் வழங்கப்பட்டிருப்பதால் மிக எளிமையாக குறிப்புகளை எடுக்க முடியும்.

இத்துடன் ஸ்டூடியோ பிளஸ் வசதி வழங்கப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை கொண்டு திரைப்படங்களை உருவாக்க முடியும்.

இத்துடன் யு.எஸ்.பி. டைப்-சி, யு.எஸ்.பி. 3.0ஒ1, யு.எஸ்.பி. 2.0 ஒ1, எச்.டி.எம்.ஐ மற்றும் எச்பி ஃ மைக் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் வீடியோ சற் மேற்கொள்ள வி.ஜி.ஏ. கேமரா ஒன்றும் வழங்கப்பட்டிருக்கிறது. சாம்சங் நோட்புக் 7 ஸ்பின் (2018) முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு, அதன் பின் மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)