Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய கிரிக்கெட்டில் ஊழல் – இந்திய அணியின் முன்னாள் தலைவர் குற்றச்சாட்டு

In கிாிக்கட்
Updated: 07:15 GMT, Jan 8, 2018 | Published: 07:15 GMT, Jan 8, 2018 |
0 Comments
1215
icon_com
This post was written by : Puvanes
azar001

கிரிக்கெட் பற்றி எதுவுமே தெரியாதவர்களே தற்போது கிரிக்கெட் சபையை நடத்திவருகின்றார்கள் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் இன்று (திங்கற்கிழமை) நடைபெற்ற கிரிக்கெட் சங்க சிறப்புக் கூட்டத்திற்கு தன்னை அனுமதிக்காத விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அசாருதீன் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், அணியில் இடம்பெற இலட்சக்கணக்கில் பணம் செலுத்தவேண்டும் என வீரர்கள் தெரிவித்து வருகின்றனர் எனவும், கிரிக்கெட் அமைப்பு என்பது 1932 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகின்றது இது தனிப்பட்டவரின் வீடு அல்ல எனவும் அசாருதீன் குறிப்பிட்டுள்ளார்.

நான் பத்து ஆண்டுகளாக இந்திய அணியின் தலைவனாக இருந்துள்ளேன் எனச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது கிரிக்கெட் அமைப்பை நடத்துகின்றவர்கள் தன் வழ்க்கையில் ஒருதடவையேனும் துடுப்பாட்ட மட்டையையோ, பந்தையோ தொட்டதும் இல்லை எனக் கூறியுள்ளார்.

என்னுடைய உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைக்கு ஏனைய உறுப்பினர்களின் ஆதரவு அவசியம் எனினும் ஊழல் அதிகாரிகள் காரணமாக வாய்ப்புகளை மறுத்து வருகின்றனர் என அசாருதீன் குற்றம் சாட்டியுள்ளார்.

அதேபோன்று எனது உறுப்பினர் சேர்க்கைக்கு ஏனைய உறுப்பினர்கள் பங்களிப்பு செய்தால் நான் பிரச்சினையை தீர்த்து வைப்பேன் என அசாருதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று ஐதராபாத் – ராஜுவ் காந்தி அரங்கத்தில் நடைபெற்ற கிரிக்கெட் சங்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அசாருதீனை கூட்டத்திற்கு அனுமதிக்கவில்லை எனவும், சுமார் ஒரு மணித்தியாலம் அவரை வெளியே காத்திருக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)