Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மொரகஹகந்த – களுகங்கை பல் இலக்கு நீர்ப்பாசன திட்டம் திறந்து வைப்பு!

In இலங்கை
Updated: 07:18 GMT, Jan 8, 2018 | Published: 07:18 GMT, Jan 8, 2018 |
0 Comments
1140
This post was written by : Anojkiyan

மொரகஹகந்த – களுகங்கை பல் இலக்கு நீர்ப்பாசன திட்டம், மக்கள் பயன்பாட்டிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான தேசிய அரசாங்கம் தாபிக்கப்பட்டு, இன்றுடன் மூன்று வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) குறித்த நீர்ப்பாசன திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

நான்கு தசாப்தங்களின் பின்னர், நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமாக கடந்த 2007ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டம் கருதப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg