Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இருபது லட்சம் பெறுமதியான கஞ்சா தூளுடன் சந்தேகநபர் கைது

In இலங்கை
Updated: 08:02 GMT, Jan 8, 2018 | Published: 08:02 GMT, Jan 8, 2018 |
0 Comments
1250
This post was written by : Risha

இருபது லட்சம் ரூபாய் பெறுமதியான 34 கிலோகிராம் கஞ்சா தூளுடன் சந்தேக நபரொருவர் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை வேளையில் குறித்த கைது இடம்பெற்றதாகக் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றினையடுத்து மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரவின் வழிகாட்டிலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் காத்தான்குடி அனாதை விடுதி வீதியில் அதிகாலை 1.40 மணியவில் சோதனை நடவடிக்கையில் ஈடபட்டனர்.

இதன்போது முச்சக்கரவண்டியி ஆசனத்தின் பின்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 34 கிலோகிராம் கஞ்சாத்தூள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg