Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எண்ணெய்த்தாங்கியில் கசிவு: சீனாவின் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து

In
Published: 07:33 GMT, Jan 8, 2018 |
0 Comments
1103
icon_com
This post was written by : Suganthini

சீனாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான எண்ணெய்த்தாங்கிக் கப்பலிலிருந்து எண்ணெய் கசிந்துவருவதால், சுற்றுச்சூழல் மாசடையக்கூடிய பாரிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பனாமா நாட்டுப் பதிவுடைய ஸாஞ்சி எண்ணெய்த்தாங்கிக் கப்பலும், ஹொங்கொங் நாட்டுப் பதிவுடைய சிஃஎப். கிறிஸ்ரல் சரக்குக் கப்பலும் சீனாவின் ஸாங்காய் மாகாணத்தில் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, ஈரானைச் சேர்ந்த 30 மாலுமிகளும் பங்களாதேஷைச் சேர்ந்த 2 மாலுமிகளும் காணாமல் போயுள்ள நிலையில், இவர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்கின்றது. இதேவேளை, சரக்குக் கப்பலிலிருந்த 21 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து, எண்ணெய்த் தாங்கிக் கப்பலிலிருந்து தொடர்ச்சியாக எண்ணெய் கசிந்து வருவதாகவும், இந்த எண்ணெய் மசகு எண்ணெயை விட சுற்றுச்சூழலுக்கு பாரிய ஆபத்து விளைவிக்கும் எண்ணெய் வகையைச் சேர்ந்ததெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எண்ணெய்த்தாங்கிக் கப்பல், ஈரானிலிருந்து ஒரு லட்சத்து 36 ஆயிரம் தொன்  எண்ணெயை சுமந்துகொண்டு வந்த அதேவேளை, சரக்குக் கப்பல் சுமார் 64 ஆயிரம் தொன் தானியங்களை அமெரிக்காவிலிருந்து சுமந்துகொண்டு சீனாவுக்கு வந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)