Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலிடத்திற்கு முன்னேறியது பெங்களூர்!

In உதைப்பந்தாட்டம்
Updated: 07:37 GMT, Jan 8, 2018 | Published: 07:36 GMT, Jan 8, 2018 |
0 Comments
1111
This post was written by : Puvanes

இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து தொடரின் 42ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா அட்லெடிகோ டி அணியை பெங்களூர் எப்.சி அணி வெற்றிபெற்றுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரில் நடந்த குறித்த போட்டியின் 40ஆவது நிமிடத்தில் பெங்களூர் அணியின் தலைவர் சுனில் செத்ரி முதலாவது கோலினைப் பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக நகர்ந்த போட்டியின் இறுதிவரை கோல் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூர் அணி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.

இந்த வெற்றியுடன் 18 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட பெங்களூர் அணி தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதேசமயம் புள்ளிப்பட்டியலில் 9 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் தொடர்ந்தும் 7ஆவது இடத்தில் கொல்கத்தா அணி நீடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg