Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஈரான் அழைப்பு

In
Published: 07:53 GMT, Jan 8, 2018 |
0 Comments
1079
This post was written by : Suganthini
iran

ஈரானில் கடந்த சில நாட்களாக நிலவிய அமைதியற்ற நிலைமை தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைக்கான தலைவர் ஃபெட்ரிகா மொஹெரினிக்கு, வெளிவிவகார அமைச்சர் ஜவாட் ஸரீப் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

ஈரானின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்நாட்டு நிலைவரம் தொடர்பாகக் கலந்துரையாட ஐரோப்பிய ஒன்றியம் இணங்கியுள்ளதாகவும், இந்த வாரம் சந்திப்புக்கான சாத்தியக்கூறு காணப்படுவதாகவும், ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் சிக்மர் கப்ரியல் தொலைக்காட்சிச் சேவையொன்றில் தோன்றி தெரிவித்துள்ளார்.

ஈரானில் நிலவும்  ஊழல் நிறைந்த ஆட்சி மற்றும் ஸ்திரமற்ற பொருளாதார நிலைமையைக் கண்டித்து கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ஆர்ப்பாட்டக்கார்களைக் கலைப்பதற்காக பொலிஸார் முற்பட்டபோது, இரு தரப்பினர்களுக்குமிடையில் வன்முறை வெடித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)