Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சகோதரியின் மரணச்சடங்கில் பங்கேற்க லாலு பிரசாத்திற்கு பிணை கிடைக்குமா?  

In இந்தியா
Updated: 08:21 GMT, Jan 8, 2018 | Published: 08:21 GMT, Jan 8, 2018 |
0 Comments
1133
This post was written by : Kemasiya

கால்நடை தீவன  ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீகாரின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் சகோதரி மரணமடைந்ததால், அவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க லாலுவிற்கு பிணை கோரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக லாலுபிரசாத்தின் மகன் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லாலுவின் மகன் தேஜஸ்வி, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“அத்தை இறந்த செய்தியை சிறையில் உள்ள எனது தந்தையிடம் தெரிவித்துள்ளதோடு, அவரை பிணையில் எடுப்பதற்கும் முயற்சித்து வருகிறோம்” என தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லாலுப்பிரசாத்திற்கு, 3 1/2 வருட சிறைவாசத்தை நேற்று முன்தினம் சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஏற்கனவே தற்காலிகமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவரின் தண்டனை உறுதிசெய்யப்பட்டு சிறை வாழ்வை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg