Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீன்களை திருடி விற்ற பணியாளருக்கு பணித்தடை

In இலங்கை
Published: 08:24 GMT, Jan 8, 2018 |
0 Comments
1055
This post was written by : Risha
suspension-of-work

கிளிநொச்சி பொதுச் சந்தையில் மீன் வியாபாரி ஒருவரின் மீன்களை திருடி விற்பனை செய்த கரைச்சி பிரதேச சபையின் துப்பரவு பணியாளர் ஒருவருக்கு பணித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் கரைச்சி பிரதேச செயலாளரினால் இன்று (திங்கட்கிழமை) பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

வியாபார நடவடிக்கைகளை தொடர்ந்து நேற்று மாலை எஞ்சிய மீன்களை வைத்துவிட்டு குறித்த வியாபாரி சென்றுள்ளார். இன்று காலை சென்று பார்த்தபோது, அங்கிருந்த சுமார் 20 கிலோகிராம் மீன் குறைவதை அவர் அவதானித்துள்ளார்.

இதனை தொடர்ந்து விசாரணை செய்த போது கரைச்சி பிரதேச சபையின் பணியாளர் ஒருவர் உணவகம் ஒன்றுக்கு இறால் மற்றும் கனவாய்களை விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக வியாபாரி கரைச்சி பிரதேச சபை செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த கரைச்சி பிரதேச செயலாளர் குறித்த பணியாளருக்கு உடனடியாக அமுலுக்குவரும் வகையில் பணித்தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)