Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினிகாந்தின் பாபா முத்திரைக்கு உரிமை கோரும் நிறுவனம்!

In இந்தியா
Updated: 09:14 GMT, Jan 8, 2018 | Published: 09:14 GMT, Jan 8, 2018 |
0 Comments
1221
This post was written by : Kemasiya

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தது முதல் ரசிகர்கள் முன் பாபா முத்திரையை காட்டி தனது உரைகளை நிகழ்த்தி வரும் நிலையில், குறித்த முத்திரை தமது நிறுவனத்தின் சின்னம் என இணையத் தொழில்நுட்ப நிறுவனமொன்று உரிமை கோரியுள்ளது.

“வாக்ஸ்வெப்” என்னும் நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) நடிகர் ரஜினிகாந்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் மூலமே மேற்படி  உரிமை கோரியுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த முத்திரையை நடிகர் ரஜினிகாந்த் 2002ஆம் ஆண்டு வெளிவந்த தனது பாபா திரைப்படத்தில் பயன்படுத்தியிருந்தார். ஆனால் குறித்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 18 மாதங்களே என்பது குறிப்பிடத்தக்கது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg