Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிக் பேஷ் தொடர் – ஸ்டிரைகர்ஸ் அணியிடம் வீழ்ந்தது சிட்னி!

In கிாிக்கட்
Updated: 08:39 GMT, Jan 8, 2018 | Published: 08:39 GMT, Jan 8, 2018 |
0 Comments
1149
This post was written by : Puvanes

அவுஸ்ரேலியா பிக் பேஷ் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணியை, அடிலெய்ட் ஸ்டிரைகர்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய ஐ.பி.எல் போன்று பிரபல்யம் வாய்ந்த பிக் பேஷ் தொடரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிட்னி தண்டர் அணியுடன் அடிலெய்ட் ஸ்டிரைகர்ஸ் அணியுடன் களம் கண்டது.

நாணயச்சுழற்சியில் வென்ற ஸ்டிரைகர்ஸ் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இங்ராம் 48 ஓட்டங்களையும், கேரி 34 ஓட்டங்களையும் அதிகபட்சமாக அந்த அணிக்கு பெற்றுக்கொடுத்தனர். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு தங்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.

159 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய சிட்னி அணி துடுப்பாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் 20 ஓவர்கள் நிறைவில் 133 ஓட்டங்களுக்கு 9விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதனால் 25 ஓட்டங்களால் ஸ்டிரைகர்ஸ் அணி வெற்றியை தனதாக்கிக்கொண்டது. இந்த வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளைப்பெற்றுக்கொண்டு ஸ்டிரைகர்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg