Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூரில் புதிய அரசியல் சரித்திரத்தை ஏற்படுத்தவுள்ள ஐ.தே.க.

In
Updated: 09:10 GMT, Jan 8, 2018 | Published: 09:10 GMT, Jan 8, 2018 |
0 Comments
1167
This post was written by : Risha

நடைபெறவுள்ள தேர்தலினூடாக ஏறாவூரில் புதிய அரசியல் சரித்திரத்தை நிலைநாட்டுவோம் என ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் அறபா வட்டார வேட்பாளர் முஹம்மத் சறூஜ் தெரிவித்தார்.

ஏறாவூர் அறபா வட்டாரத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வர்த்தகர்களின் தரகுப் பணத்தை எதிர்பார்த்தோ, மக்களின் வரிப் பணத்தை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கிலோ நாம் தேர்தலில் களமிறங்கவில்லை.

மாற்று அரசியல் தலைமைத்துவம் இல்லாததால் ஏறாவூர் நகர பிரதேசம் நீண்ட காலமாக ஒரு மாயையான அரசியல் பிடிக்குள் சிக்கியிருக்கின்றது. முதலில் இந்த துரதிஷ்ட நிலையிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும்.

அதன் பின்னரே பிரதேச மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு முழுமையான சேவைச் செய்ய முடியும். இதனை முன்னுதாரமாகச் செய்து காட்டவே நாம் அரசியலுக்குள் நுழைந்துள்ளோம்.

நகர சபையைக் கைப்பற்றுவதன் மூலம் எதனை வரப்பிரசாதமாக அடைந்து கொள்ளலாம் என்று ஒரு சாரார் திட்டம் தீட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளனர். அதுதான் அவர்களின் மக்கள் சார்ந்த அரசியல் வியூகம்.

ஆனால், நாம் அந்த சிந்தனை ஏதுமில்லாமல் இப்பிரதேச மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேர்தலை எதிர்கொள்கின்றோம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg