Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கர்ப்பிணித் தாய்மார்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Published: 09:25 GMT, Jan 8, 2018 |
0 Comments
1125
icon_com
This post was written by : Ravivarman
IMG_1035

மன்னார், மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் கர்ப்பிணித் தாய்மார்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று (திங்கட்கிழமை) காலை மாதாந்த பரிசோதனைக்குச் சென்ற கர்ப்பிணித்தாய்மார்கள் அங்கு மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாத காரணத்தினால் மீண்டும் ஒரு தினத்திற்கு வருமாறு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதனால், தாம் தொடர்ச்சியாக திருப்பி அனுப்பப்படுவதினைக் கண்டித்து நூற்றுக்கணக்கான கர்ப்பிணித்தாய்மார்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் வீதியை மறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் 2 மணித்தியாலங்களுக்கு மேலாக குறித்த வீதியூடான போக்குவரத்துக்கள் பாதிப்படைந்திருந்தது.
இது தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் கருத்துத் தெரிவிக்கையில், ‘இது குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு முழு காரணமும் நிர்வாகத்தில் உள்ள சீரின்மையே.

எனவே வெகு விரைவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தில் அதிகளவான மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளேன்’ என அவர் தெரிவித்தார்.

DSC_0107 DSC_0076

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)