Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லாட்சிக்கு எதிராக வாள் ஏந்திய கம்மன்பில

In இலங்கை
Published: 10:10 GMT, Jan 8, 2018 |
0 Comments
1198
This post was written by : Risha

நல்லாட்சி அரசாங்கம் இன்று மூன்றாவது ஆண்டில் காலடி பதிக்கின்ற நிலையில் பிவித்துரு ஹெல உறுமய கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாளை ஏந்தியவாறு ஊடக சந்திப்iபொன்றை நடத்தியிருந்தனர்.

நல்லாட்சியை புறக்கணித்து கறுப்பு உடையுடன் வந்த உதய கம்மன்பில, இந்த அரசாங்கம் மேலும் நீடித்தால் நாட்டின் எதிர்காலம் சீரழியும் என எச்சரித்தார்.

குறித்த ஊடக சந்திப்பானது கொழும்பிலுள்ள பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றிருந்தது.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ”இன்று ஜனவரி எட்டாம் திகதி. நாட்டிற்கு எதிர்காலத்தை இல்லாது செய்த, வேலை முடியாத, திருடர்கள் நிறைந்த அரசாங்கம் பொறுப்பேற்று இன்றுடன் மூன்றாண்டுகளாகின்றன.

மக்களுக்கான நீதியை நிலைநாட்டுமாறு கோரி தேசிய கொடியில் சிங்கத்திடமிருந்த வாள், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ஆனால், அதனை அவர் முறையாக பயன்படுத்தியிருந்தால் பிணைமுறி விவகாரத்தில் பிரதமர் ரணில், ஊழல் மோசடியில் ரவி கருணாநாயக்க மற்றும் வன அழிப்பு தொடர்பாக ரிஷாட் பதியூதீன் ஆகியோர் வெட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஜனாதிபதி இவ்வளவு காலமும் அந்த வாளை ஒரு அலங்காரப் பொருளாக மாத்திரமே வைத்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த அரசாங்கம் தொடர்ந்து மேலும் இரு ஆண்டுகளுக்கு நீடித்தால், இந்த நாடும் இருக்காது, நாட்டின் எதிர்காலமும் இருக்காது. எனவே நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் போராட்டத்தை மக்கள் ஆரம்பிக்க வேண்டும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)