Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவில் பனி விழா: 34 ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைவு

In
Updated: 09:25 GMT, Jan 8, 2018 | Published: 09:25 GMT, Jan 8, 2018 |
0 Comments
1167
This post was written by : Suganthini

வட சீனாவில் ஹார்பின் சர்வதேச பனி விழா நடைபெற்றுவரும் நிலையில், அவ்விழாவைக் கொண்டாடும் வகையில்  34 ஜோடிகள் இன்று (திங்கட்கிழமை) ஒரேநேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

சீனாவில் ஒவ்வொரு வருடமும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவரும் ஹார்பின் சர்வதேச பனி விழா, கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. இந்நிலையில், 34 ஜோடிகள் ஒரேநேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

சிவப்புக் கம்பளத்தின் மீதாக திருமண ஜோடிகள் அழைத்துவரப்பட்டு, திருமணம் செய்துவைக்கப்பட்டது.

எதிர்வரும் பெப்ரவரியில் பனி உருகத் தொடங்கும்வரை இவ்விழா நடைபெறுமென்பதுடன்,  அதிகளவான  சுற்றுலாப் பயணிகளையும் இவ்விழா கவர்ந்து வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg