Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக அரசின் மாற்றத்திற்காக நான் போராடி வருகிறேன்: தினகரன்

In இந்தியா
Updated: 09:59 GMT, Jan 8, 2018 | Published: 09:59 GMT, Jan 8, 2018 |
0 Comments
1133
This post was written by : Kemasiya

தமிழக அரசு மாறவேண்டும் என்பதற்காகவே எனது போராட்டம் அமைந்துள்ளது என, ஆர்.கே.நகர். சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) முதல்தடவையாக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தினகரன் மேற்படி தெரிவித்துள்ளார்.

“தற்போதைய தமிழக அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தால் அதை நாம் ஆதரிப்போம். இந்த அரசை நீக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போராடி வருகிறேன்.

இன்று சட்டசபைக் கூட்டத்தின் போது ஆளும்கட்சி உறுப்பினர்கள் என்னைப் பார்த்து புன்னகைத்தார்கள். தி.மு.க.வினர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்” என அவர் கூறியிருந்தார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg