Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோல்டன் குளோப் விருது வென்ற தமிழர்!!

In சினிமா
Published: 10:05 GMT, Jan 8, 2018 |
0 Comments
1050
This post was written by : Arul Jesu
Untitled

ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவின் ஹாலிவுட் பத்திரிகை கூட்டமைப்பால் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்படுகின்றன.

சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சி தொடர்களுக்கும், கலைஞர்களுக்கும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஓஸ்கர் விருதுகளுக்கு அடுத்து கௌரவமான விருதாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகளின் 75ஆவது விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில உள்ள தி பிவர்லி ஹில்டம் ஹோட்டலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

விழாவை அமெரிக்க நகைச்சுவை நடிகர் சேத் மெயர்ஸ் தொகுத்து வழங்கினார்.

இந்த விழாவில் ஆசியாவின் சிறந்த தொலைக்காட்சி, இசை மற்றும் நகைச்சுவை நடிகர் பிரிவில் அஸிஸ் அன்சாரி விருதினைப் பெற்றுள்ளார்.

கொலொம்பியாவில் பிறந்த இவர் தமிழர் என்பதுடன் ஹாலிவுட்டில் பல படங்களிலும், அங்கு பிரபலமான பல தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்து வருவதுடன், நகைச்சுவைத் தொடர்களில் நடித்து பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

75ஆவது கோல்டன் குளோப் விருதுகள் விவரம்:-

திரைப்படங்கள் பிரிவு:
சிறந்த திரைப்படம்: த்ரி பில்போர்ட்ஸ் அவுட்ஸ் எபிங், மிசோரி
சிறந்த நடிகை: பிரான்சஸ் மெக்டோர்மண்ட் (த்ரி பில்போர்ட்ஸ் அவுட்ஸ் எபிங், மிசோரி)
சிறந்த நடிகர்: கேர்ரி ஒல்டுமென் (டார்க்கஸ்ட் அவர்)
சிறந்த திரைப்படம் (இசை ரூ நகைச்சுவை பிரிவில்): லேடி பேர்ட்
சிறந்த நடிகை (இசை ரூ நகைச்சுவை படப்பிரிவில்): சாய்ரஸ் ரோனன் (லேடி பேர்ட்)
சிறந்த நடிகர் (இசை ரூ நகைச்சுவை படப்பிரிவில்): ஜேம்ஸ் பிரான்கோ (தி டையாஸ்டர் ஹாடிஸ்ட்)
சிறந்த துணை நடிகை : அலிசன் ஜான்னே, சிறந்த துணை நடிகை (ஐ டோனியா)
சிறந்த துணை நடிகர்: சாம் ராக்வெல் (த்ரி பில்போர்ட்ஸ் அவுட்ஸ் எபிங், மிசோரி)
சிறந்த இசையமைப்பு: தி ஷேப் ஆப் வாட்டர்
சிறந்த பாடல்: தி இஸ் மீ ( தி கிரேடஸ்ட் ஷோமென்)
சிறந்த திரைக்கதை: த்ரி பில்போர்ட்ஸ் அவுட்ஸ் எபிங், மிசோரி
சிறந்த பிறமொழி திரைப்படம்: இன் தி ஃபேர்ட்
சிறந்த அனிமேஷன் திரைப்படம்: கோகோ
தொலைக்காட்சி:
சிறந்த தொலைக்காட்சித் தொடர்: தி ஹேன்மெய்ட்ஸ் டேல்
சிறந்த நடிகை (தொலைக்காட்சித் தொடர்) : எலிசபெத் மோஸ் (தி ஹேன்மெய்ட்ஸ் டேல்)
சிறந்த நடிககர் (தொலைக்காட்சித் தொடர்): ஸ்டெர்லிங் கே.ப்ரவுன் (தி இஸ் அஸ்)
சிறந்த தொலைக்காட்சித் தொடர் (இசை ரூ நகைச்சுவைப்பிரிவு): தி மார்வெல்லஸ் மிஸ் மைசல்
சிறந்த நடிகை (இசை ரூ நகைச்சுவைப்பிரிவு): ரேச்சல் புரோஸ்னகன் (தி மார்வெல்லஸ் மிஸ் மைசல்)
சிறந்த நடிகர் (இசை ரூ நகைச்சுவைப்பிரிவு): அசிஸ் அன்சாரி (மாஸ்டர் ஆப் நோன்)
வரையறுக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள் பிரிவு
சிறந்த நாடகம்: பிக் லிட்டில் லைஸ்சிறந்த நடிகர்: இவான் மெக்ரிகர் (ஃபார்கோ)
சிறந்த நடிகை: நிக்கோலா நிக்மன் (பிக் லிட்டில் லைஸ்)
சிறந்த துணை நடிகர்: அலெக்ஸ்சாண்டர் ஸ்கேர்ஸ்கார்ட் (பிக் லிட்டில் லைஸ்)
சிறந்த துணை நடிகை: லாரா டெர்ன் (பிக் லிட்டில் லைஸ்)
கோல்டன் குளோப்பில் கௌரவ விருதாக வழங்கப்படும் சிசில் பி. டிமெய்ல் விருது இவ்வருடம் அமெரிக்க நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஓப்ரா வின்ஃப்ரேவுக்கு வழங்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)